திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை திறப்பு விழா எழுச்சியுடன் பாடல்கள் பாடி ஆரவாரமான முறையில் கைத்தட்டல்களுடன் குத்துவிளக்கு ஏற்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சிறகுகள் அறக்கட்டளை சார்பில் கல்வி வளர்ச்சி, சமூக வளர்ச்சி, மருத்துவ வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மாணவர்களின் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்காகவும் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை துவங்கப்பட்டுள்ளது என திறப்பு விழாவில் பேசியவர்கள் வாழ்த்து பேசினர்.
மேலும் சிறகுகள் அறக்கட்டளையை பயன்படுத்தி சமுதாய மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த அறக்கட்டளை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுச்சிமிகு அறக்கட்டளை திறப்பு விழா நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மூத்த வழக்கறிஞர் சித்தார்த் கௌதம், அஇஅதிமுக மாணவர் அணி தலைவர் அன்புமணி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரத்தினகுமார், எல்ஐசி சக்திவேல், ராமதாஸ், கோவிந்தராஜ், அம்பேத்கர், வழக்கறிஞரும் மாவட்ட அறங்காவலர்கள் நியமன குழு உறுப்பினருமான வெங்கடேசன்,
வழக்கறிஞர்கள் பிரதீப், ஜெயராமன், மணிகண்டன், சுரேஷ், பிரேம் குமரன், கலையரசன், சமூக ஆர்வலர்கள் கிருபா, சங்கர், பொறியாளர் அசோக் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் சிறகுகள் கல்வி சமூக அறக்கட்டளை திறப்பு விழாவில் கலந்து கொண்டு இந்த அறக்கட்டளை மேன்மேலும் வளர்ந்து சமூக வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று வாழ்த்தி பேசினர்.




Comments
Post a Comment