சிவ ஸ்ரீ பிரம்படி சித்தர் மதுரா அவர்களின் சேவையைப் பாராட்டி 2022ம் ஆண்டிற்கான கருடன் விருது, அகில பாரதிய சந்த் சமதியின் தமிழக மாநில தலைவர் யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் வழங்கினார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் ஆசிரமத்தில் அகில பாரதிய சந்த் சமிதி கருடன் விருது 2022 வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில பாரதிய சந்த் சமதியின் தமிழக மாநில தலைவர் யுக குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கலந்துகொண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ ஸ்ரீ பிரம்படி சித்தர் மதுரா அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக 2022ம் ஆண்டிற்கான கருடன் விருது மற்றும் அகில பாரதிய சந்த் சமிதியின் தமிழ்நாடு இணைச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்டவற்றை வழங்கி பாராட்டினார். அப்போது கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார். முன்னதாக முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளன்று மதுரையில் சர்வதேச தலைமை கவுன்சில் சார்பில் நடைபெற்ற 2022ம் ஆண்டிற்கான கலாம் தலைமை...