120 மாணவர்கள் பயின்ற பள்ளியில் ஒரே ஆண்டில் 40 மாணவர்களாக எண்ணிக்கை குறைந்தது , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தில் 120 மாணவர்கள் பயின்ற அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் மாற்றத்தால் மாணவர்கள் எண்ணிக்கை 40 தாக குறைந்தது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகத்தில் நேரில் வந்து புகார். ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியரை பணியமர்த்த கோரி மனு அளித்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒன்றியம், துளுவபுஷ்பகிரி கிராமத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருவண்ணாமலை சிஇஓ அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, நாங்கள் வசித்து வரும் துளுவபுஷ்பகிரி கிராமத்தில் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது.
இந்த துவக்க பள்ளியில் 120 மாணவர்கள் பயின்று வந்தனர். ஆனால் தற்போது இந்த ஆண்டு திடீரென அந்த எண்ணிக்கை 40 மாணவர்களாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை மீனா என்ற ஆசிரியை அந்தப் பள்ளியை கவனித்து வந்ததாகவும், மாணவர்கள் சரியான முறையில் எல்கேஜி யுகேஜி போன்ற ஆங்கில வகுப்புகளும் பயின்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு சில காரணங்களுக்காக மணிமேகலை என்ற ஆசிரியை தற்போது அந்த பள்ளியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தற்போது சரியாக படிக்க முடியாததால் எல்கேஜி, யுகேஜி ஆங்கில வகுப்புகள் நிறுத்தப்பட்டதாலும் 120 மாணவர்கள் பயின்று வந்த பள்ளியில் தற்போது ஒரே ஆண்டில் 40 மாணவர்களாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த 40 மாணவர்களின் பெற்றோர்கள் சிஇஓ அலுவலகம் வந்து ஏற்கனவே மீனா ஆசிரியை மாணவர்களுக்கு பாடம் நடத்த அவர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்துவிட்டு சென்றனர்.
தங்கள் கோரிக்கை ஏற்று ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியரை நியமிக்காவிட்டால் தற்போது பயின்று வரும் 40 மாணவர்களும் அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்று விடுவார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வந்து கோரிக்கை மனு அளித்த போது இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஇஓ அலுவலகத்தில் உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர்கள் சென்றனர்.



Comments
Post a Comment