மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது, மத உணர்வுகள் புண்படும்படி பேசுவது திமுகதான், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தாக்கு.
திருவண்ணாமலை இரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழகத்தில் மதமாற்றம் மிக வேகமாக நடந்து வருகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகவும் இந்துக்கள் சிறுபான்மையினராகவும் மாறி உள்ளனர்.திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகரிக்கிறது.
குறிப்பாக பட்டியல் சமுகத்தை குறிவைத்து மதமாற்றக்கூடிய போக்கு அதிகரித்து காணப்படுகிறது.இது போன்ற மோசடி செய்து மதமாற்றுவதை தடுக்கின்ற மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.
கோயில் நிலங்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசாங்கத்தின் ஆட்சியில் திருப்தி இல்லை, மக்களே ஏன் வாக்களித்தோம் என்று வேதனையில் உள்ளனர்.
மகளிர்க்கு ஆயிரம் ரூபாய், விலைவாசி கட்டுப்படுத்துதல், சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திமுக அரசாங்கம் தோல்விதான் கண்டிருக்கிறது.தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத காரணத்தினாலும், மக்களுக்கு சேவை செய்யாத காரணத்தினாலும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இப்போது தேர்தல் வைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
அரசியலுக்காக மதத்தை பயன்படுத்துபவர்கள் திமுகவினர் தான். அடிப்படைவாதிகளுடன் கூட்டணி வைத்திருப்பவர்களும் அவர்கள் தான். கிறிஸ்தவ அமைப்பினருடன் பங்கெடுத்து மதமாற்றம் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது, மத உணர்வுகளை புண்படும்படி பேசுவது திமுக தான்.
பாஜகவினர் எப்போதும் மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது கிடையாது. காளி தேவியை தவறாக போஸ்டர் போட்டு சித்தரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முகமது நபி குறித்து பேசுயதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்துக் கடவுள்களை இழிவு படுத்தியவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை. எனவே மதத்தை வைத்து அரசியல் செய்வது திமுகவினர் தான்.
அண்ணாமலையார் கோயிலுக்கு உடனடியாக யானை வாங்க வேண்டும். திருவண்ணாமலையில் உள்ள நெடுஞ்சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்பட வேண்டும்.
சுதந்திர இந்தியா 75 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை தமிழக அரசு முன் நின்று நடத்த வேண்டும்.தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளை நேரில் சென்று சந்தித்து தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும்.
இவ்வாறு இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார். அப்போது பாஜக மாவட்ட எஸ்.சி அணி தலைவர் விஜயராஜ், மகளிர் அணி தலைவர் சந்திரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.





Comments
Post a Comment