திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் செயற்குழு கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மங்கலம் ஜி.ஆர்.எம் திருமண மஹாலில் நடைபெற்றது.
ஒன்றிய செயற்குழு கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமை தாங்கினார்.
ஒன்றிய பொது செயலாளர் சங்கர் கூட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கே.எம்.குமார்ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சதீஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு புதிய ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன் அவர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், அபிதா, ராமசாமி, ஏனைய அணி தலைவர்கள் தேவேந்திரன், சங்கர், சக்திவேல், ஆறுமுகம், கிளைத் தலைவர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மங்கலம் ஊராட்சியில் பொதுக்கழிப்பிடம் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும், மங்கலத்தில் இருந்து ராந்தம், நம்பியந்தல், வள்ளிவாகை வழியாக திருவண்ணாமலை வரை அரசு பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானமும், வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தன் சொந்த நிலத்தில் மண் எடுத்ததற்கு மங்கலம் காவல்துறையினர் சட்டவிரோதமாக மண் எடுப்பதாக மிரட்டி ரூ.5000 லஞ்சப்பணம் பெற்றதை கண்டித்தும்,
திமுக உறுப்பினர் அட்டை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக வேலையில் இருந்து டெங்கு ஒழிப்பு பணியாளர்களை பணி நீக்கம் செய்த மருத்துவ அதிகாரி ராஜா அவர்களை கண்டித்தும் இந்த செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில் தேமுதிக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி பத்துக்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் ஒன்றிய பொதுச் செயலாளர் குமார் நன்றி உரையாற்றினார்.








Comments
Post a Comment