விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தில் நடைபெற்ற துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஹேமாவதி விஜயரங்கன் திருமண மஹாலில் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த அறிமுக கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் S.அமரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஒன்றிய தலைவர் R.யுவராஜன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் ஆர்.ஜீவானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி சிறப்புரையாற்றினர்.
மாவட்டத் துணைத் தலைவர் இறைமாணிக்கம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் எம்.டி.சுந்தர்ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாவட்டச் செயலாளர் குமார்ராஜா, மாவட்ட செயலாளர் செந்தில்குமார்,மாவட்ட விவசாய அணி தலைவர் ஆர்.பிரகாஷ், மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், முன்னாள் ஒன்றிய தலைவர் பழனி, ஒன்றிய பொதுச் செயலாளர் சக்திவேல், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் அருணகிரி, நகர்ப்புற ஊரக வளர்ச்சி பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மகளிர் அணி தலைவர் சந்திரா, மாவட்ட செயலாளர் குமாரி மணிவண்ணன் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்து வருகிறார்.ஒன்றிய செயலாளர் வள்ளி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன் மற்றும் கிளைத் தலைவர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாஜக தொண்டர்கள் இந்த அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும் நாயுடுமங்கலம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஜெயபால் அவர்களின் ஏற்பாட்டில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி ஆக மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இறுதியாக நாயுடுமங்கலம் ஊராட்சி கிளை தலைவர் செல்வன் நன்றி தெரிவித்தார்.








Comments
Post a Comment