பாஜக மீது காழ்ப்புணர்ச்சி, ஆளும் கட்சிக்கு ஜால்ரா, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் திருவண்ணாமலை நகராட்சி நுழைவுவாயில் முன்பு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்த நகராட்சி ஊழியர்களை கண்டித்து ஏராளமான பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடி இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எஸ்டி ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தங்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட கே.அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் திருவண்ணாமலை மாவட்ட குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.
அந்த போஸ்டர்களை நகராட்சி ஊழியர்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் ஒருதலைபட்சமாகவும் வேண்டுமென்றே எங்கும் பாஜகவுக்கு ஆதரவான போஸ்டர்கள் திருவண்ணாமலையில் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்டிக்கும் விதமாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நகரத் தலைவர் திருமாறன் ஏற்பாட்டில், மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில், பொருளாளர் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் ரோஷன்லால், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சந்தோஷ் பரமசிவம், எஸ் டி அணி மாவட்டத் தலைவர் சஞ்சீவி பழனி, இளைஞரணி செயலாளர் மணிமாறன், நகர பொதுச்செயலாளர் செந்தில்வேல், நகர ஓபிசி அணி பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், நகர பொருளாளர் சரவணன், அருணகிரிநாதன், மகளிர் அணி பொருளாளர் மாலதி, மகளிர் அணி தலைவி மலர்கொடி, மகளிர் அணி பொதுச் செயலாளர் ராஜதமயந்தி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் திருவண்ணாமலை நகராட்சி முன்பு பாஜக வுக்கு எதிராக செயல்பட்ட நகராட்சி ஊழியர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நகராட்சி கமிஷனரை சந்தித்து இது குறித்து மாவட்ட தலைவர் உள்ளிட்ட பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக ஆணையாளர் உறுதி அளித்ததன் பேரில் பாஜகவினர் கலைந்து சென்றனர்.






Comments
Post a Comment