திருவண்ணாமலை மாவட்டம்,துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் மங்கலம் பேருந்து நிலையத்தில் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு வெற்றி பெற்றதை ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் அவர்களின் வழிகாட்டுதல்படி, இந்தியாவின் 15ஆவது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் வெற்றி பெற்றதை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரப்பன் அவர்களின் ஏற்பாட்டில், ஒன்றிய தலைவர் A.தங்கராஜி தலைமையில்,மாவட்டச் செயலாளர் குமார்ராஜா அவர்களின் முன்னிலையில், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் மங்கலம் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் இளஞ்செழியன், ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர், முன்னாள் ஓ பி சி அணி மாவட்ட செயலாளர் சிவாஜி, ஒன்றிய துணைத் தலைவர் ஜீவா, முன்னாள் எஸ் சி அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு செந்தில், அண்ணாமலை, பாஸ்கர், நடராஜன், ஆறுமுகம், முருகன், முனியப்பன், அமலதாஸ், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திரவுபதி முர்மு அவர்கள் 60% சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக என் டி ஏ கூட்டணியின் சார்பில் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளையும் திரௌபதி முர்மு அவர்கள் பெற்றுள்ளார் என்பது பாஜக கூட்டணி ஒரு மிகச்சிறந்த சரியான ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்தி இருந்தது என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஒரு பழங்குடியின பெண்ணை நாட்டின் உயரிய பொறுப்பான ஜனாதிபதி பதவியில் அமர வைத்து அழகு பார்த்துள்ளது அனைவரின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அது மிகை ஆகாது.
சமூக நீதி மற்றும் ஜனநாயகம் என்று எதிர்க்கட்சியினர் பெயரளவில் மட்டுமே பேசி வரும் நிலையில் பாஜக அதைத் தொடர்ந்து 100% உண்மையாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதால் பாஜகவிற்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு பெருகி வருகிறது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
Post a Comment