பட்டியல் இனத்தை இழிவுபடுத்தி வினாத்தாள் தயார் செய்த பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சரை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு வினாத்தாளில் ஜாதிவெறி வினாத்தாள் தயாரித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மன்னிப்பு கேட்டு, பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுக்க கோரி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி தலைவர் விஜயராஜ் தலைமையில், மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக பட்டியல் இனத்தை இழிவுபடுத்தும் விதமாக வினாத்தாள் தயார் செய்த பெரியார் பல்கலைக்கழகத்தையும், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்களையும் கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக பட்டியலணி மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம், வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் அருணை ஆனந்தன், இறைமாணிக்கம், பட்டியலணி வடக்கு மாவட்ட தலைவர் முனைவர் முத்து, பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளர் செங்கம் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழகத்தையும், உயர்கல்வித்துறை அமைச்சரையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கருணாகரன், ராஜதமயந்தி, பட்டியலணி மாவட்ட பார்வையாளர் ஏழுமலை, இளைஞரணி மாவட்ட தலைவர் சந்தோஷ் பரமசிவம், எஸ்டி அணி மாவட்ட தலைவர் சஞ்சீவி பழனி, அருணகிரி, பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் மலர்கொடி, மாவட்டச் செயலாளர்கள் தர்மலிங்கம், செந்தில், இளஞ்செழியன், நகர பொதுச்செயலாளர் செந்தில்வேல் ,
ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் எஸ்.பிரபாகரன், மாவட்ட துணை தலைவர் N.S.பூபதி, மாவட்ட செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், மணிமாறன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






Comments
Post a Comment