சிவத்திரு. ச. கணேசன் ஐயா அவர்களின் சிவநெறிச் சேவையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்களால் ” திருக்கோவில் உழவார செம்மல்" என்ற விருது வழங்கப்பட்டது.
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தின் 295 வது உழவாரப்பணி 24 அக்டோபர் வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் திருவண்ணாமலை பகுதி பக்தர்கள் இடையே திருக்கோவில்களின் தூய்மை நலன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதி உலா அடியார்கள் இணைந்து பன்னிரு திருமுறை ஈசனை சுமந்து கைலாய வாத்தியங்களுடன் திருக்கோவில்களின் தூய்மை குறித்த பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு செய்தனர். விழிப்புணர்வின்போது பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் துணிப்பை வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து 25 அக்டோபர் சனிக்கிழமை சிவஅண்ணாமலையார் அன்னதான அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட சைவ பெருவிழாவில் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு. ச. கணேசன் ஐயா அவர்களின் சிவநெறிச் சேவையைப் பாராட்டி உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க மகாதேவன் அவர்கள...