இந்திய அரசு காந்தி சில்ப் பஜார் கண்காட்சியை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்
இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் காந்தி சில்ப் பஜார் அகில இந்திய கைவினைப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பணையை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகத்தின் கை வினை பொருட்கள் துறை நிதியுதவியுடன் காந்தி சில்ப் பஜார் அகில இந்திய கைவினைப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி மற்றும் விற்பனை பெட் கிராட் ஏற்பாட்டில் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டது.
பெட் கிராட் ஏற்பாட்டில் நடைபெறும் மாபெரும் விற்பனை மற்றும் கண்காட்சியினை தமிழ் நாடு சட்டப்பேரவை துணைத் தலைவைர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.
இந்த விற்பணை மற்றும் கண்காட்சி வரும் 9 ந் தேதி வரை 7 நாட்கள் காலை 10முதல் இரவு 8.30.வரை நடைபெறும். அனைத்து தினங்களிலும் இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த அனைத்து மாநில கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்களும் நேரடி விற்பணை நடைபெறுகிறது. கைவினைக் கலைஞர்களின் நேரடி செயல்முறை விளக்கமும் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சி விற்பணையில் பங்கேற்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கள் முறையில் தினசரி பரிசு பொருட்களும் வழங்கப்பட உள்ளதாகவும் இந்திய அரசு கைவினை துறை துணை இயக்குனர் தன்ராஜ் மற்றும் பெட் கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் உள்ளிட்ட கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.







Comments
Post a Comment