திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளியில், திருவண்ணாமலை மாவட்ட வனவாசி சேவா கேந்திரம் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி மற்றும் புத்தாடை வழங்கு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எஸ்.வி.எம் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், ஆர்.எஸ்.எஸ் திருவண்ணாமலை மாநகர தலைவர் எஸ்.வி.முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜதமயந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அவரது ஏற்பாட்டில் வேட்டி, சேலை, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
வனவாசி சேவா கேந்திர மாநில அமைப்பு செயலாளர் துளசி கணேசன், மாநிலப் பெண்கள் பொறுப்பாளர் அ.சிவகங்கை, திருவண்ணாமலை ஆர்.எஸ்.எஸ் கே.அரவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவர் தமிழரசி, ஊடக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வனவாசி சேவா கேந்திர நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புத்தாடை இனிப்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பெற்று பலனடைந்தனர்.
சுதேசி பொருட்களை மட்டுமே நாம் அனைவரும் வாங்குவதற்கு உறுதி ஏற்று அதற்கு அடையாளமாக ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பு அதற்கான ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ள வேண்டும் என்றும் இந்த கொண்டாட்டத்தின் நடுவே அந்த ஸ்டிக்கரும் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொடுத்து கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.





Comments
Post a Comment