தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றி, கராத்தே செய்து சாதனை புரிந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள்
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லை கலைக்கூடம் சார்பில் சங்கராபுரம் நியூ பவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கேல் ரத்னா சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 45 நிமிடம் சிலம்பம் சுற்றியும் , கராத்தே செய்தும் மாணவர்கள் சாதனை புரிந்தனர்.
45 நிமிடம் சிலம்பம் சுற்றி, கராத்தே செய்து சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் பனியன் உள்ளிட்டவை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மூத்த ஆசான்கள் பலர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி ஆசான் சரவணன் MBA, MTech அவர்களுக்கு கேல் ரத்னா உலக சாதனை நிகழ்ச்சி நடத்துநர் கராத்தே மணி அவர்கள் ஆசான் சரவணனுக்கு டைமெடல், சான்றிதழ், டை விசில், கோப்பை மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இதில் 25க்கும் மேற்பட்ட மாவட்ட கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
45 நிமிடம் சிலம்பம் சுற்றி, கராத்தே செய்து சாதனை புரிந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்களுக்கு ஆசான் சரவணன்.ச மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.





Comments
Post a Comment