உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவச பொது மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் தலைவர் வி.ஜெகதீசன் தலைமையில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, இசிஜி பரிசோதனை, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம், தோல் மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 300க்கும்ப் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளை வாங்கிச் சென்றனர்.
உன் நோயாளி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளை புதுவை பிம்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்தில் அழைத்துச் செல்லப்படும், மேல் சிகிச்சைக்கு மருத்துவமனையின் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவர் மற்றும் செவிலியர் கட்டணம் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனை, திருவண்ணாமலை மாவட்டம் மெய்யூர் உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்கம் சார்பில் கீழ்பென்னாத்தூரில் 300க்கும் மேற்பட்டோர் பயனடைந்த இலவச மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் கோ.சரவணன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.லட்சுமி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்க தலைவர் வி.ஜெகதீசன், செயலாளர் பி. சுரேஷ் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் என்.குணசேகரன், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க வழக்கறிஞர் அணி பொருளாளர் அருண்தத்தன், உடல் ஊனமுற்றோர் மறுவாழ்வு சங்க மக்கள் தொடர்பாளர் சிவா தமிழன், பிம்ஸ் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment