காவலர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மார்கெட்டிற்கு காய்கறிகள் ஏற்றி வந்த ஆந்திர மாநில லோடு வாகனத்தில் வந்த பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் வண்புனர்வு செய்த கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்களான சுந்தர், சுரேஷ்ராஜா ஆகிய இருவரையும் கண்டித்து ஜனநாயக இயக்கங்களின் ஒருங்கிணைப்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. தலித் விடுதலை இயக்கம் மாநில பொதுச் செயலாளர் தோழர் தலித் நதியா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவலர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்க வேண்டும், குற்றம் செய்யும் காவலர்களை சக காவலர்கள் பாதுகாக்கக் கூடாது எனவும், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பணியை நிரந்தரமாக நீக்க சட்டம் இயற்ற வேண்டும், உழைக்கும் மக்களின் குரலாக செயல்படும் ஆட்சியில் இல்லாத ஜனநாயக இயக்கங்கள், கட்சிகள், அமைப்புகளுக்கு உரிய மதிப்பும், பாதுகாப்பும் வழங்குவது அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறையின் கடைமை எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதையும் கண்டித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மாவட்டச் செயலாளர் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் பசுமைச்செல்வன், மாவட்ட இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் தோழர் ஞானவேல், மாவட்ட தலைவர் SDPI கட்சி தோழர் முஸ்தக் பாஷா, மக்களிடம் கற்ப்போம் குழு வழக்கறிஞர் தோழர் கண்ணன்,
மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம் தோழர் ராம்குமார், மாவட்டச் செயலாளர் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தோழர் சக்திவேல், மாநில தலைவர் தலித் விடுதலை இயக்கம் தோழர் கிச்சா, மாவட்டச் செயலாளர் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி,வழக்கறிஞர் தோழர் அன்சர் மில்லத்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா லெ-விடுதலை) தோழர் ஆறுமுகம், மாநகரச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர் பிரகலாதன், மாவட்டச் செயலாளர் மக்கள் சனநாயகக் குடியரசு கட்சி தோழர் கார்த்திக், மாவட்டச் செயலாளர் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் தோழர் சிந்தனைச் செல்வன்,
மாவட்டச் செயலாளர் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி தோழர் தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
இறுதியில் மக்கள் சனநாயகக் குடியரசு கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் முரளிதமிழன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.






Comments
Post a Comment