திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே திருவண்ணாமலை மாவட்ட புரட்சித் தமிழர் கட்சி மற்றும் தமிழர் குடிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்கள் 224 வது குருபூஜை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அறிவொளி பூங்கா அருகே பிரம்மாண்டமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது பாண்டியர் சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக புரட்சித் தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜே.பி.ராஜன் தலைமையில் நெய் தீபம் ஏற்றி, மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் சிவா தமிழன், மாவட்ட தலைவர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் தலையாம்பள்ளம் ப.கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை அறிவொளிபூங்கா அருகில் புரட்சித் தமிழர் கட்சியின் தமிழர் குடிகள் சமூக அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் திருமகனார் ஜெயந்தி விழா நடைபெற்றது புரட்சித் தமிழர் கட்சி மாநில பொதுச் செயலாளர் சிவா தமிழன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட செயலாளர் தலையாம் பள்ளம் பா கண்ணன்.. வரவேற்று சிறப்பு செய்தார்...மாவட்ட தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தார்.. புரட்சித் தமிழர் கட்சியின் மாநில தலைவர்
ஜே பி ராஜன்... தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மோட்ச தீப விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.. மேலும் நிகழ்வில் விஸ்வநாத தாஸ் தொழிலாளர் கட்சி மாநில தலைவர் எஸ் கே செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்... நிகழ்வில் புரட்சித் தமிழர் கட்சி மாநில துணைத்தலைவர் மிலிட்டரி வெங்கடேஷ். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் வீரபத்திரன்.. செஞ்சி முருகன்... உள்ளிட்ட ஏராளமான .. பொதுமக்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில் தமிழ் மாநில BMS உடன் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக திரளான சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்தக் கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள இரண்டு இலட்சம் திருமண அழைப்பாளர்கள் தொழிலை தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் அமைப்புச் சாரா தொழிலாளர்களாக சேர்க்க வேண்டி தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை 70 ஆண்டுகால தொழிற்சங்கமான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட BMS ல் இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாரதிய திருமண அமைப்பாளர்கள் நலச் சங்கம் சார்பில் இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் வழியாக கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க நிறுவனத் தலைவர் செங்கம் ராஜா தலைமையில், மாநிலத்...

Comments
Post a Comment