கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி மீது நடவடிக்கை எடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காயம் அடைந்தவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆராஞ்சி ஊராட்சியைச் சேர்ந்த குமரக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சம்பத். அவரது சொந்த நிலத்தில் டிராக்டர் மூலம் மணல் எடுப்பதற்கு சென்றபோது அவரது பங்காளியான சங்கர் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பத்தை கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். சங்கர் என்பவர் சம்பத்தின் நெஞ்சில் மிதித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் படுகாயம் அடைந்த சம்பத் கடந்த 3 நாட்களாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சம்பத்தின் மனைவி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நாங்கள் ஏழைகளாக இருப்பதால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக அவரது மனைவி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். இனியாவது தங்களுக்கு உரிய பாதுகாப்பினை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என சம்பத்தின் மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏ...