திருவண்ணாமலை சோ. கீழ் நாச்சி பட்டு திண்டிவனம் சாலையில் புதிதாக ஜெயின்ஸ் ஹுண்டாய் கார் விற்பனை ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் ஹுண்டாய் கம்பெனியின் ஜோனல் பிசினஸ் ஹெட் அணிஷ் ஷகர்வால், சவுத் சோன் ஜோனல் பிசினஸ் ஒருங்கிணைப்பாளர் யங் ஹூன் யூன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஹூண்டாய் கார் விற்பனை நிலையத்தை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தனர்.
சுசில் மேத்தா M.D, ஸ்ரேய் மேத்தா E.D, தமிழ்நாடு ரீஜனல் சேல்ஸ் தலைவர் கௌரி ஸ்ரீகாந்த், சர்வீஸ் தலைவர் ஜான்பால் உள்ளிட்ட ஏராளமான கார் ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
புதிதாக கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு கார் சாவி வழங்கி கார் டெலிவரி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment