பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு காரணம் தந்தை பெரியார் தான் என தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் அம்பேத்கர் எழுச்சி இயக்கம் சார்பில் தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அம்பேத்கர் எழுச்சி இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருத்துரையாளர்களாக தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தலித் நதியா,
திராவிடர் கழக மாவட்ட செயலாளர் ராம்குமார், சமூக ஆர்வலர்கள் பிரகாஷ் , ராஜா, ஆசிரியர் மகாலட்சுமி, மக்கள் சனநாயக குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் முரளி தமிழன், மாணவர் புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், சி ஐ டி யு ரவி,
வழக்கறிஞர் மோகன் சமூக நலப் பேரவை நிறுவனர் யுவராஜ் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
பெண்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும், ஆண்களை விட பெண்கள் வலிமையானவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன,
பெண்களுக்கு அரசியலில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண்கள் அரசியலில் சாதிப்பதற்கு காரணம் தந்தை பெரியார் தான் என தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் தலித் நதியா பேசினார்.
செல்லங்குப்பம் கிராமத்தைச் சுற்றியுள்ள தச்சம்பட்டு, ஆவூர், ஆங்குணம், பன்னியூர் கிராம கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.








Comments
Post a Comment