குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10,000 உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திரளான மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திருவண்ணாமலை மாவட்ட மக்களைத்தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 10,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் A.ரீனா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மக்களைத்தேடி மருத்துவ சங்க ஊழியர்கள் பங்கேற்று மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் பாரி, மாவட்ட தலைவர் காங்கேயன், மாவட்ட பொருளாளர் முரளி, செங்கம் தோழர்கள் தமிழ் பூங்கா, இளங்குண்ணி சரிதா, பாண்டீஸ்வரி, தண்டராம்பட்டு தேவி, சந்தியா, நிரோஷா, சுகன்யா, அந்தோணியம்மாள், காட்டாம்பூண்டி சத்யா, நதியா, போளூர் காயத்ரி, வாசுகி, துரிஞ்சாபுரம் ரம்யா, ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 10,000 வழங்க வேண்டும், இ எஸ் ஐ, பி எப் சட்டங்கள் அமல்படுத்த வேண்டும், தீபாவளி பண்டிகை செலவு ஒரு மாத சம்பளம் முன்பணம் வழங்க வேண்டும்.
மகளிர் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும், பணிநேர வரைமுறை செய்திட வேண்டும், பயணப்படி உணவு படி உள்ளிட்டவை வழங்க வேண்டும், பனிக்காலத்தில் இறக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் வழங்க வேண்டும்.
ஊழியர் திறன் வளர்க்கும் பயிற்சி அளித்து சான்றுகள் வழங்க வேண்டும், அனைவருக்கும் சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.





Comments
Post a Comment