150 க்கும் மேற்பட்ட திருமண அமைப்பாளர்களுக்கு தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ், இனிப்பு, பொறி கடலை, பழம் வழங்கி அசத்திய அனைத்து திருமண அமைப்பாளர்கள் சங்கம்
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து திருமண அமைப்பாளர்கள் நல சங்கத்தின் ஆண்டு விழா சிறப்பு மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை கூட்டம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாதாந்திர ஜாதக பரிவர்த்தனை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு முப்பெரும் விழாவாக ஆண்டு விழாவானது கொண்டாடப்பட்டது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கு பூர்ணாஹுதியுடன் பூஜை செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருமண அமைப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு ஜாதக பரிவர்த்தனை செய்தனர்.
இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் தீபாவளி பரிசாக பட்டாசு பாக்ஸ், மதிய உணவு, இனிப்பு, பொறி கடலை, பழம் உள்ளிட்டவை விழா ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக ஜாதகப் பரிவர்த்தனையும் செய்யப்பட்டது.
மாநிலத் தலைவர் P.ஈஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் M.சாந்தி, மாநில பொருளாளர் அம்சவேணி, மாநில மகளிர் அணி தலைவி மாலா, மாநில செயல் தலைவர் தணிகாசலம்,
மாவட்டத் தலைவர் S.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் N.மோகன் குமார், மாவட்ட பொருளாளர் ஏழுமலை, மாவட்டத் துணைத் தலைவர் மூர்த்தி , மாவட்ட இணை செயலாளர் தர்மன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட திருமண அமைப்பாளர்கள் இந்த மாதாந்திர சிறப்பு ஜாதக பரிவர்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.







Comments
Post a Comment