3500 மாணவர்கள் பங்கேற்ற மேலேரி ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி, சந்தானம் சிலம்ப அகாடமி மாணவர்கள் அசத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தில் நியூ பவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்கள் கலந்து கொண்ட மேலேரி ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 3500க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட கராத்தே மற்றும் சிலம்பம் மாணவர்கள் திருவண்ணாமலை (JSKDI) மாவட்ட தலைவர் ஆசான் ச.சரவணன் MBA , MTech தலைமையில் கலந்து கொண்டனர். உடன் கராத்தே கு.ராஜசேகர், உதவி பயிற்சியாளர் உள்ளிட்டவர்கள் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி உலக சாதனை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சந்தானம் சிலம்ப மாணவர்கள் சுமார் 40 நிமிடங்கள் கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சி செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
சிலம்பம் மற்றும் கராத்தே உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சங்கராபுரம் கராத்தே மணி சிறப்பான முறையில் செய்து இருந்தார்.





Comments
Post a Comment