Skip to main content

Posts

Showing posts from June, 2023

துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில், கோவூர் ஊராட்சி பூத் எண் 22ல் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனைகள் விளக்க தெருமுனை பிரச்சாரம்

  திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக கோவூர் ஊராட்சி பூத் எண் 22ல் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால பாஜக மத்திய அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பி.சி. அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ், மாவட்ட தலைவர்    ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மோடி அரசின் சாதனைகள் குறித்து பொது மக்களிடையே எடுத்துக் கூறினர்.   மன் கி பாத் நிகழ்ச்சி  மாவட்ட பொறுப்பாளர் இளஞ்செழியன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் ரகுநாதன், ஒன்றிய பார்வையாளர் பிச்சாண்டி, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சரவணன், சத்தியமூர்த்தி சர்மா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜீவ் காந்தி, சக்திவேல், விவசாய அணி தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மணிகண்டன் சந்தோஷ் மற்றும் 400க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், அணி, பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,அருணாச்சலம் அடியார்கள் மனு அளித்ததால் பரபரப்பு

  திருவண்ணாமலை அடுத்த ஆடையூரில் செயல்பட்டு வரும் டிவிஎஸ் தனியார் பள்ளி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது எனவும், தனது மகனை பள்ளியில் சேர்க்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க முடியும் என்று கூறும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் புகார் மனு அளித்துள்ளார். திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மதத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார். தனியார் பள்ளி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது எனவும், தனது மகனை பள்ளியில் சேர்க்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ச...

உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர்

  திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் வெளுங்கனந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர்.  உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், வெளுங்கணந்தல் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் செய்யப்பட்டது.  பள்ளியில் பயிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.   இதில் சூரிய நமஸ்காரம், பத்மாஸனம், பாதஹஸ்தாசனம் போன்ற பல ஆசனங்கள் செய்தனர்.    உடன் ஒன்றிய பொதுச்செயலாளர் D.சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் E.ராஜுவ்காந்தி, ஒன்றிய பொருளாளர் மாகாதேவன், ஒன்றிய செயலாளர் K.கிருஷ்ணன், K.ரமேஷ், M.அசோகன், K.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

5000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பிரதமருக்கு அஞ்சல் அட்டை மூலம் நன்றி, பாஜக மாவட்ட பொருளாளர் SPK.சுப்பிரமணியன் அறிவிப்பு

  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக வேட்டவலம் ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்க பயனாளிகள் மாநாடு நடைபெற்றது.  திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் பயனாளிகள் மாநாடு நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் எஸ் பி கே சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 5000க்கும் மேற்பட்ட மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேரடியாக அஞ்சல் அட்டையின் மூலம் நன்றி தெரிவித்து தபாலில் நன்றி கடிதம் எழுத உள்ளனர் என்று தெரிவித்தார். பயனாளிகள் மாநாட்டின் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் சேகர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆர் சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜீவா வரவே...

கொரோனா நோய் தொற்று போல் மீண்டும் நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது, அதனை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சித்தர் பகீர் தகவல்

  திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில், நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்புரையாற்றினார். மீண்டும் மோடி, மீண்டும் மோடி என்று கூட்டுப் பிரார்த்தனை, இந்து எழுச்சி மாநாடு, செங்கோல் விளக்கம் உள்ளிட்டவை வெகு விமரிசியாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் பட்டியல் அணி தலைவர் விஜயராஜ் தலைமையில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு, செங்கோல் பூஜை, கிரிவலம் மற்றும் கிரிவலப் பாதை சுற்றி மரக்கன்றுகள் நடுதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.  மேலும் இந்த நிகழ்ச்சியில் 108 சாது மகாத்மாக்களின் கிரிவலம், 108 சுமங்கலி பெண்கள் கிரிவலம், 108 மரக்கன்றுகள் நடுதல், ஒரு லட்சம் விதை பந்துகள் வழங்குதல் இவை அனைத்து நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொண்டனர். மேலும் திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில்  மீண்டும் மோடி வேண்டும் மோடி என...

மாநிலத் தலைவரின் 39வது பிறந்தநாளில் அவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ கணபதி ஹோமம், கூட்டு பஜனை, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பால் அன்னதானம் வழங்கி விமரிசையாக கொண்டாடிய அருணாச்சலம் அடியார்கள்

திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மடத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார். கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் 39 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் 39வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் கிரிவலப் பாதையில் உள்ள அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் கிரிவலம் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பால் அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 9 மணி முதல் ஆன்மீக பஜனை ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் பஜனை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பல்லாண்டு காலம...