உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் வெளுங்கனந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம், பாதஹஸ்தாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்கள் செய்து அசத்தினர்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம், வெளுங்கணந்தல் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி பாஜக சார்பில் ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் செய்யப்பட்டது.
பள்ளியில் பயிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
இதில் சூரிய நமஸ்காரம், பத்மாஸனம், பாதஹஸ்தாசனம் போன்ற பல ஆசனங்கள் செய்தனர்.
உடன் ஒன்றிய பொதுச்செயலாளர் D.சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் E.ராஜுவ்காந்தி, ஒன்றிய பொருளாளர் மாகாதேவன், ஒன்றிய செயலாளர் K.கிருஷ்ணன், K.ரமேஷ், M.அசோகன், K.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.





Comments
Post a Comment