மாநிலத் தலைவரின் 39வது பிறந்தநாளில் அவர் பல்லாண்டு காலம் நலமுடன் வாழ கணபதி ஹோமம், கூட்டு பஜனை, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பால் அன்னதானம் வழங்கி விமரிசையாக கொண்டாடிய அருணாச்சலம் அடியார்கள்
கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார்.
இந்த நிலையில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் 39 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் 39வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் தலைமையில் கிரிவலப் பாதையில் உள்ள அருணாச்சலம் மகா அன்னதான மடத்தில் கிரிவலம் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு பால் அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று இரவு 9 மணி முதல் ஆன்மீக பஜனை ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பான முறையில் பஜனை இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக இன்று அதிகாலை 4 மணி அளவில் கணபதி ஹோமம் செய்து அருள்மிகு அண்ணாமலையாருக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தப்பட்டது.
அத்துடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் புகழ், வளர்ச்சி, அறிவு, ஆற்றல், திறமை, தூய எண்ணம் உள்ளிட்ட அனைத்து நற்குணங்கள் பற்றியும் அருணாச்சலம் அடியார்களால் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment