துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில், கோவூர் ஊராட்சி பூத் எண் 22ல் பாரத பிரதமரின் 9 ஆண்டு சாதனைகள் விளக்க தெருமுனை பிரச்சாரம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பாக கோவூர் ஊராட்சி பூத் எண் 22ல் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் A.தங்கராஜி M.A தலைமையில் பாரத பிரதமரின் 9 ஆண்டு கால பாஜக மத்திய அரசின் சாதனைகள் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக ஓ.பி.சி. அணியின் மாநிலத் தலைவர் சாய் சுரேஷ், மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மோடி அரசின் சாதனைகள் குறித்து பொது மக்களிடையே எடுத்துக் கூறினர்.
மன் கி பாத் நிகழ்ச்சி மாவட்ட பொறுப்பாளர் இளஞ்செழியன், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் ரகுநாதன், ஒன்றிய பார்வையாளர் பிச்சாண்டி, ஒன்றிய பொதுச் செயலாளர்கள் சரவணன், சத்தியமூர்த்தி சர்மா, ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜீவ் காந்தி, சக்திவேல், விவசாய அணி தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மணிகண்டன் சந்தோஷ் மற்றும் 400க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், அணி, பிரிவு பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment