5000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பிரதமருக்கு அஞ்சல் அட்டை மூலம் நன்றி, பாஜக மாவட்ட பொருளாளர் SPK.சுப்பிரமணியன் அறிவிப்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக வேட்டவலம் ஸ்ரீ வாசவி திருமண மண்டபத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்க பயனாளிகள் மாநாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட துணைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் பயனாளிகள் மாநாடு நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொருளாளர் எஸ் பி கே சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 5000க்கும் மேற்பட்ட மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேரடியாக அஞ்சல் அட்டையின் மூலம் நன்றி தெரிவித்து தபாலில் நன்றி கடிதம் எழுத உள்ளனர் என்று தெரிவித்தார்.
பயனாளிகள் மாநாட்டின் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் சேகர், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஆர் சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் ஸ்ரீதர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜீவா வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய தலைவர் பழனிவேல், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் யுவராஜன் மற்றும் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் தங்கராஜ், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்
கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் நன்றி உரையாற்றினார்.





Comments
Post a Comment