பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,அருணாச்சலம் அடியார்கள் மனு அளித்ததால் பரபரப்பு
திருவண்ணாமலை அடுத்த ஆடையூரில் செயல்பட்டு வரும் டிவிஎஸ் தனியார் பள்ளி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது எனவும், தனது மகனை பள்ளியில் சேர்க்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க முடியும் என்று கூறும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் புகார் மனு அளித்துள்ளார்.
திருவண்ணாமலை காஞ்சி சாலை, கிரிவலப் பாதையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அருணாச்சலம் அடியார்கள், அருணாச்சலம் மகா அண்ணா மடம் என்னும் ஆன்மீக மதத்தை நிறுவி கடந்த 50 ஆண்டு காலமாக ஆன்மீகப் பணியில் சிறப்பான முறையில் ஈடுபட்டு வருகிறார்.
கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மாதா மாதம் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறார்.
தனியார் பள்ளி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது எனவும், தனது மகனை பள்ளியில் சேர்க்காமல் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்க முடியும் என்று கூறும் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அருணாச்சலம் அடியார்கள் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Comments
Post a Comment