கொரோனா நோய் தொற்று போல் மீண்டும் நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது, அதனை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று சித்தர் பகீர் தகவல்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் விஜயராஜ் தலைமையில், நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்புரையாற்றினார். மீண்டும் மோடி, மீண்டும் மோடி என்று கூட்டுப் பிரார்த்தனை, இந்து எழுச்சி மாநாடு, செங்கோல் விளக்கம் உள்ளிட்டவை வெகு விமரிசியாக நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜகவின் பட்டியல் அணி தலைவர் விஜயராஜ் தலைமையில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு, செங்கோல் பூஜை, கிரிவலம் மற்றும் கிரிவலப் பாதை சுற்றி மரக்கன்றுகள் நடுதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 108 சாது மகாத்மாக்களின் கிரிவலம், 108 சுமங்கலி பெண்கள் கிரிவலம், 108 மரக்கன்றுகள் நடுதல், ஒரு லட்சம் விதை பந்துகள் வழங்குதல் இவை அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.
மேலும் திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்தில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்று 2024 நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் 40-ம் நமதே என கூட்டுப் பிரார்த்தனை மற்றும் செங்கோல் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதமாதா செந்தில், மன்னார்குடி ரவிச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தி, கண்ணன், அண்ணாமலை சித்தர், சிவா, வெற்றிவேல் மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Comments
Post a Comment