திருவண்ணாமலை, போளூர் சாலை, செட்டிகுளமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு நம் அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. 108 தம்பதிகள் முன்னிலையில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், பக்தி பாடல்கள் பாடி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு 108 தம்பதி பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அம்மனின் அருள் பெற்றனர். ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து தம்பதியினருக்கும் அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி இத்து திருக்கோயிலில் ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை சிறப்பாக நடைபெற்றது.
கால்வாய் பணிகள் முடிக்காததால் கழிவுநீர் வெளியேறி நோய் தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவல நிலை, விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சோகம், கழிவுநீர் கால்வாய் முழுமையாக போடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் ஆவேசம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நான்கு வழி சாலை போடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி வருவோர் இருக்கும் இடங்களில் கழிவு நீர் ஆறு போல் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் வரும் வாகனங்கள் வழுக்கு விழுந்து ஏற்கனவே 3 பேர் பலியாகி உள்ளனர். கழிவுநீர் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்பட்டு, குழந்தைகள், முதியோர் என அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். கழிவுநீர் கால்வாய் பணிகளை முடிக்காமல் சாலை போடும் காண்ட்ராக்டர் சாலையை முடித்துவிட்டு செல்லலாம் என்று ஏற்பாடு செய்து வருகின்றனர். அவ்வாறு கழிவுநீர் கால்வாய் முழுமையாக கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் சாலை பணிகளை முடித்தால் கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிக...