4000 கராத்தே மாணவர்கள் பங்கேற்ற தேசிய கராத்தே போட்டிகளில் சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 7 பேர் முதலிடம் பிடித்து சாதனை
வேலூர் மாவட்டம் ஶ்ரீ புரம் ஶ்ரீ நாராயணி பள்ளி மற்றும் ஜப்பான் சிட்டோ-ராய் கராத்தே பயிற்சி பள்ளி இணைந்து நடத்திய தேசிய கராத்தே போட்டிகளில் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்று சிறந்த முறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
ஸ்ரீபுரம் நாராயணி சக்தி அம்மா அவர்கள் ஆசியுடன் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 4000 கராத்தே மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கராத்தே R.சுப்பிரமணி கலந்து கொண்டார்.
தேசிய கராத்தே போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டம் சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 21 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதில் 7 பேர் முதல் பரிசு, 8 பேர் இரண்டாம் பரிசு மற்றும் 6 பேர் மூன்றாவது பரிசு பெற்றனர். பரிசு பெற்றவர்களுக்கு கோப்பை, மெடல் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சந்தானம் தற்காப்பு கலை நிறுவனர் கியோஷி ச.சரவணன் அவர்களுக்கு 8 வது கருப்பு பட்டை நாராயணி பள்ளியில் ஹன்சி ரமேஷ் பாபு மற்றும் திரைப்பட நடிகர் கராத்தே ராஜா சேர்ந்து 8வது கருப்பு பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவப் படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்திய கராத்தே மாணவர்கள் மற்றும் கராத்தே வீரர்களை சக்தி அம்மா, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்





Comments
Post a Comment