திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் உள்ள ராஜா ராணி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் செயல்பட்டு வரும் ஐ மேத் அபாகஸ் நிறுவனம் சார்பில் சென்ற மாதம் நடத்தப்பட்ட 8வது மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அபாகஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக பரிசுகள் வழங்கும் விழாவில் நடிகர் தாமு பங்கேற்று மரக்கன்றுகளை நட்டார். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.
டிசம்பர் 5ஆம் தேதி கவிஞரும் நடிகருமான சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா சினேகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
டிசம்பர் 7ஆம் தேதி நடிகர் தாமு அவர்கள் இரண்டாவது கட்டமாக அபாகஸ் போட்டியில் பங்கேற்று சிறப்புரையாற்றி அபாகஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ், மரக்கன்றுகள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். முன்னதாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
விழாவில் ஐ மேத் அபாகஸ் நிறுவனர்கள் சுதா கார்த்திகேயன், சக்தி தினகரன், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment