வருகிற 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி ஸ்ரீ கணபதி ஹோமம், 108 தம்பதிகள் பூஜை நடைபெற்றது
திருவண்ணாமலை, போளூர் சாலை, செட்டிகுளமேட்டில் அமைந்துள்ள அருள்மிகு நம் அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
108 தம்பதிகள் முன்னிலையில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வியில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், பக்தி பாடல்கள் பாடி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது.
அன்னை ஸ்ரீ தேவி கருமாரி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு 108 தம்பதி பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் சாமி தரிசனம் செய்து அம்மனின் அருள் பெற்றனர். ஸ்ரீ மகா கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜையில் கலந்து கொண்ட அனைத்து தம்பதியினருக்கும் அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
வருகிற 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை ஒட்டி இத்து திருக்கோயிலில் ஸ்ரீ கணபதி ஹோமம் மற்றும் 108 தம்பதிகள் பூஜை சிறப்பாக நடைபெற்றது.



Comments
Post a Comment