149 ஆவது மாதமாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை ஒட்டி கிரிவலம் வந்த 45 லட்சம் பக்தர்களுக்கு 3 ஆயிரம் லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு இட்லி சாம்பார் உடன் தீபத் திருவிழா மகா தீபத்தை ஒட்டி ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் அன்னதானம் வழங்கப்பட்டது
தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி வழங்கி பசி ஆற்றும் அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை
கடந்த 13 ஆண்டுகளாக பௌர்ணமி தோறும் 6000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம், சாம்பாருடன் இட்லி வழங்கி பக்தர்களின் பசியாற்றும் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை தீபத் திருவிழா கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கியது. 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி என சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றியதால் பக்தர்கள் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீ அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை கடந்த 13 ஆண்டுகளாக மிகச் சிறப்பான முறையில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு 6000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும், இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளருமான திரு.தியாகராஜன் அவர்கள் ஓய்வு பெற்ற பின் ஆரம்பித்தது இந்த கிரிவல பக்தர்களின் பசியாற்றும் அறக்கட்டளை.
பக்தர்களின் ஒத்துழைப்பாலும், சிவனடியார்களின் ஆதரவினாலும் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும் மாலை 06:00 மணிக்கு தொடங்கி 3000 நபர்களுக்கு குருமாவுடன் வெஜிடபிள் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லியும் சுகாதாரமான முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீருடன் வழங்கப்படுகிறது. பக்தர்கள் சாப்பிட்டு முடித்த உடன் இலைகள் அனைத்தும் குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு பின்னர் சுகாதாரமான முறையில் குப்பைகளுக்கு அனுப்பப்படுகிறது.
பௌர்ணமி பக்தர்களுக்கு அன்னதானம் நடப்பதை தவிர ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லத்திற்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பிரசித்தி பெற்ற நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலை தீபத் திருவிழா கிரிவலம் வந்த 45 லட்சம் பக்தர்களுக்கு ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளை சிறப்பு அன்னதானம் வழங்கியது. 149வது மாதமாக 3000 லட்டு, 2000 பக்தர்களுக்கு சாப்பாடு, 4000 பக்தர்களுக்கு சூடான பால், 3000 பக்தர்களுக்கு சுண்டல், 3000 பக்தர்களுக்கு சாம்பாருடன் இட்லி என தீபத் திருவிழா மட்டுமின்றி மறுநாள் பௌர்ணமி கிரிவலம் வந்த பக்தர்கள் மற்றும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றியதால் பக்தர்கள் நன்றி கலந்த பாராட்டுகளை ஸ்ரீ அருணாச்சலம் அன்னதான அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டனர்
அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு 2026 புத்தாண்டு தமிழ் காலண்டர் அருணாச்சலா அன்னதான அறக்கட்டளை நிறுவனர் தியாகராஜன் அனைவருக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எல்லோருக்கும் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே நம் அறக்கட்டளையின் நோக்கம். நீங்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறக்கட்டளையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நீங்களும் அறக்கட்டளை மூலம் அன்னதானம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9443535737, 9445265737







Comments
Post a Comment