கால்வாய் பணிகள் முடிக்காததால் கழிவுநீர் வெளியேறி நோய் தொற்று ஏற்பட்டு பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அவல நிலை, விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சோகம், கழிவுநீர் கால்வாய் முழுமையாக போடாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் ஆவேசம்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வாழவச்சனூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக நான்கு வழி சாலை போடப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளதால் அருகிலுள்ள வீடுகளில் வசிப்போர் மற்றும் வணிக நிறுவனங்களை நடத்தி வருவோர் இருக்கும் இடங்களில் கழிவு நீர் ஆறு போல் வெளியேறி சாலையில் தேங்கி நிற்பதால் வரும் வாகனங்கள் வழுக்கு விழுந்து ஏற்கனவே 3 பேர் பலியாகி உள்ளனர்.
கழிவுநீர் தேங்குவதால் அதில் கொசு உற்பத்தியாகி, நோய் தொற்று ஏற்பட்டு, குழந்தைகள், முதியோர் என அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
கழிவுநீர் கால்வாய் பணிகளை முடிக்காமல் சாலை போடும் காண்ட்ராக்டர் சாலையை முடித்துவிட்டு செல்லலாம் என்று ஏற்பாடு செய்து வருகின்றனர். அவ்வாறு கழிவுநீர் கால்வாய் முழுமையாக கழிவுநீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தாமல் சாலை பணிகளை முடித்தால் கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று வாழவச்சலூர் கிராம பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நெடுஞ்சாலைத்துறை இதை உடனடியாக கழிவுநீர் கால்வாய் பணிகளை முழுமைப்படுத்தி முடித்த பின்னர் சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததற்கு திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியிடம் தெரிவித்தால், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு மனு அளித்த போது திருவண்ணாமலை மாவட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றி மாற்றி அப்பகுதி மக்களை அலைக்கழிப்பதாகவும் கிராம மக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.





Comments
Post a Comment