அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அம்மன் உள்ளிட்ட 3 திருக்கோயில்கள் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, 1000கீகும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் பூதமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அம்மன் உள்ளிட்ட 3 திருக்கோயில்கள் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஊராட்சி மன்ற உறுப்பினர் ப.கோபி, சாரு ஏழுமலை, சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி, படவிட்டான், ஆனந்தன், சுமன், முருகன், தேவன், கணேசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டனர்.
முன்னதாக மங்கள இசை, குரு வந்தனம், கிராம வேதா பிரார்த்தனை, கணபதி ஹோமம், கோபூஜை, லட்சுமி ஹோமம், முதல் யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹீதி, சாந்தி ஓமம், தம்பதி பூஜை, இரண்டாம் யாககால பூஜை,108 கலச அபிஷேகம் உள்ளிட்டவைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில், அருள் தரும் அக்னி மாரியம்மன் திருக்கோயில், அருள்தரும் கமலக்கண்ணி அம்மன் உள்ளிட்ட 3 திருக்கோயில்கள் கோபுர உச்சியில் கலச புனித நீர் ஊற்றப்பட்டு மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.
பின்பு தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன் மற்றும் சேர்மன் தமயந்தி உள்ளிட்டோர் கும்பாபிஷேக திருவிழாவில் பங்கேற்றனர்.





Comments
Post a Comment