சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சி ( Impossible Book of World Record ) நடைபெற்றது.
சங்கராபுரத்தில் நடைபெற்ற சிலம்ப உலக சாதனை நிகழ்ச்சியில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் சுமார் 30 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சுமார் 1:30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை புரிந்தனர். சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ் மற்றும் ஸ்கிப்பிங் கயிறு, மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மூத்த ஆசான்கள் பலர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி ஆசான் சரவணன் MBA, MTech அவர்களுக்கு Impossible Book of world record நிகழ்ச்சி நடத்துநர் தாமோதரன் மற்றும் ஆசான் சூரியமூர்த்தி ஆகியோர் ஆசான் சரவணனுக்கு மிகப்பெரிய கோப்பை மற்றும் வீரவாள் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது. இதில் 20க்கும் மேற்பட்ட மாவட்ட கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் மற்றும் மாணவர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்களுக்கு ஆசான் சரவணன்.ச அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.