1500 வீரர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தி சர்வதேச கராத்தே போட்டிகளில் சந்தானம் அகாடமி மாணவர்கள் 8 பேர் முதலிடம் பிடித்து அசத்தல்
சென்னையில் உள்ள ஐ.சி.எப் ( ICF) பழனிச்சாமி பல்நோக்கு விளையாட்டு அரங்கில் 27வது மாகாத்மா காந்தி சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சந்தானம் தற்காப்பு கலை அகாடமி மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டனர். இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா மற்றும் இலங்கை உள்ளிட்ட சுமார் 1500க்கும் மேற்பட்ட கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற சந்தானம் அகாடமி மாணவர்களில் 8 வீரர்கள் முதல் பரிசுடன் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.
அதேபோல் இரண்டாம் பரிசு 7 பேர், மூன்றாவது பரிசு 5 பேர் சான்றிதழ் கோப்பை ஆகியவற்றை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிரபல ஸ்டன்ட் நடிகர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கராத்தே மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
சந்தானம் தற்காப்பு கலை அகாடமி நிறுவனர், பயிற்சியாளர் ஷீகான் ச.சரவணன் MBA ,MTech. சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஷீகான் சசிகுமார் அவர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்தார்.
சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த சந்தானம் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.







Comments
Post a Comment