பிரதமரின் 75வது பிறந்த நாளை 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை, 500 பனை விதைகள் நட்டு, தூய்மை பணி செய்து கொண்டாடிய பாஜகவினர்
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் ராந்தம், நம்மியந்தல் மற்றும் நூக்காம்பாடி ஊராட்சிகளில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சேவை இரு வாரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன், ஒன்றிய துணைத் தலைவர் வி.வேடிராஜ், ஒன்றிய செயலாளர் டி.கார்த்தி, கிளைத் தலைவர் ஆர்.ராஜேந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் நூகாம்பாடி ஏ.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
சிறப்பு விருந்தினராக பாஜக மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர், உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், டாக்டர் எஸ்.திவ்யா எம்.பி.பி.எஸ், டாக்டர் எஸ்.மதுமிதா பி.எஸ்.எம்.எஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திரளான பெண்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, உடல் வலி, கை, கால் வலி, வயிற்று வலி உள்ளிட்டவற்றிற்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை, டானிக் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கினர்
பின்னர் பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை ஒட்டி அருள்மிகு பர்வதவர்தினி உடனுறை திருக்கயிலைநாதர் ஆலயம் செல்லும் மலைப்பாதையில் 500 பனை விதைகள் நடப்பட்டது.
நூக்காம்பாடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகர் கோவிலில் கோயில் தூய்மை பணி செய்து சுத்தம் செய்தனர். மேலும் நூக்காம்பாடி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பலனடைந்தனர்.





Comments
Post a Comment