ஒரே நாளில் 4 கிராமங்களில் மருத்துவ முகாம், பிரதமர் 75வது பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் தொடர் மருத்துவ சேவைக்கு பாராட்டுக்கள் குவிக்கிறது
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணி மற்றும் தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கம் சார்பில் துரிஞ்சாபுறம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குண்ணியந்தல், வள்ளிவாகை, மாதுலம்பாடி மற்றும் பாலானந்தல் உள்ளிட்ட கிராமங்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75வது பிறந்த நாளை முன்னிட்டு இரு வார சேவையாக கொண்டாடப்படும் நிகழ்வின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சளி, இருமல், காய்ச்சல், சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் வலி, கை, கால் வலி உள்ளிட்டவற்றுக்கு உடல் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொண்டு பலனடைந்தனர்.
துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத் தலைவர் கவிஞர் அ.தங்கராஜி எம்.ஏ அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினராக தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கத்தின் நிறுவனர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட மருத்துவப் பிரிவு தலைவர் பிரச்சார பீரங்கி, உலக சாதனையாளர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன், PhD, மருத்துவ அணி மாவட்ட பொதுச் செயலாளர் மருந்தாளுனர் கணேஷ் பாபு, டாக்டர்.மதுமிதா.BSMS, செவிலியர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகளை இலவசமாக வழங்கி மருத்துவ முகாமினை சிறப்பான முறையில் மக்கள் பயன்படும் வகையில் நடத்தினர்.
முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வீரப்பன், ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.சங்கர், முன்னாள் ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஒரே நாளில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணியந்தல், வள்ளிவாகை, மாதுலம்பாடி மற்றும் பாலானந்தல் உள்ளிட்ட 4 கிராமங்களில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்த நாளை ஒட்டி நடைபெறும் தொடர் மருத்துவ சேவைக்கு மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது.





Comments
Post a Comment