துர்க்கையம்மன் கோவில் தெரு நற்பணி மன்றத்தின் சார்பாக திருவண்ணாமலைய அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரிய கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள துர்க்கையம்மன் கோயிலில் நவராத்திரி 6-ம் நாள் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சரஸ்வதி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். சிறப்பு பூஜை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திறனாய் பக்தர்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் மேல மந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டி வழிபட்டனர்.
துர்க்கை அம்மன் கோவில் தெரு நற்பணி மன்றத்தைச் சார்ந்த சக்தி முருகன், உண்ணாமலை திருமண மண்டபம் உரிமையாளர் குடும்பதினர், அருண்குமார், அமுதா திருமண மண்டபம் உரிமையாளர் குடும்பத்தினர், சேகர், R.R.ரெசிடென்ஸ் & குருப்ஸ் உரிமையாளர் குடும்பத்தினர்,
சம்பத், ABGP இணை ஒருங்கிணைப்பாளர், ரவி, ராஜேந்திரன், அன்பு, வெங்கடேசன் மற்றும் துர்க்கை அம்மன் கோயில் தெருமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அம்மனனை வணங்கி ஆசி பெற்றனர்.
நவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி, புளி சாதம் மற்றும் சுண்டல் அன்னதானமாக வழங்கப்பட்டது.





Comments
Post a Comment