ஆலுயரப் பற்றி எரிந்த யாகத் தீயில் 5 வயது புத்திரனாக அவதரித்த வன்னிய மகாராஜா, ஏராளமான பொதுமக்கள் நாடகத்தை கண்டு ரசித்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், களஸ்தம்பாடி வட்டம், புதுசானாநந்தல் கிராமத்தில் ருத்ர வன்னிய நாடகம், சொர்ண காமாட்சி அம்மன் திருவிளையாடல் நடைபெற்று வருகிறது. அதில் இன்று வன்னியன் பிறப்பு நாடகம் மிகச் சிறப்பான முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காமாட்சி அம்மன் வன்னிய மகா ராஜாவுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நாடகமாக நடைபெற்றது. வன்னிய மகாராஜாவாக இ.ராமதாஸ் என்பவர் வேடம் அணிந்து யாகம் வேள்வி அமைத்து பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூட்டப்பட்ட அக்னி குண்டம் ஆலுயரப் பற்றி எரிந்த தீயில் இறங்கி ஓர் 5 வயது புத்திரனாக அக்னியில் அவதரித்தார். காமாட்சி அம்மனாக எல்.சிவா என்பவரும் சிறப்பான முறையில் நடித்தார். சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாடகத்தை கண்டு ரசித்தனர். புதுசானானந்தல் கிராம பொதுமக்கள் மற்றும் வன்னிய நாடக ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.கே.செல்வம், ஏ.பரசுராமன், சி.திருப்பதி, கே.செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கே.பிச்சாண்டி ஆகியோர் தலைமையில் 5 நாட்கள் ருத்ர வன்னிய நாடகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.