19 ஆண்டு கோரிக்கையை ஒரே ஆண்டில் சாதித்து காட்டிய ஏ பி ஜி பி அமைப்பு, வெற்றி விழாவில் எம்.என்.சுந்தர் சிறப்புரை
திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேரடி ரயில் 3ம் தேதி காலை 4 மணிக்கு துவங்கியது. அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏபிஜிபி) அமைப்பினர் பூக்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
![]() |
இதன் வெற்றி விழா நிகழ்ச்சி திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த ஓராண்டு காலமாக ரயில் விட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தின் சார்பாக ஏவிஜிபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைத்து பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். அனைத்து நிர்வாகிகளும் இந்த வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்.என் சுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து ஏ பி ஜி பி தென் பாரத அமைப்புச் செயலாளர் எம்.என்.சுந்தர் , திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் வி.கே.சீனிவாசன், இணை ஒருங்கிணைப்பாளர் என்.சம்பத், வேங்கட ரமேஷ் பாபு, ராமமூர்த்தி, ரவிச்சந்திரன், நாராயணசாமி வித்யாஸ்ரீ, போளூர் பகுதி ஏ பி ஜி பி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வெற்றி விழா கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டு திருவண்ணாமலை சென்னை கடற்கரை ரயில் விடும் கோரிக்கையில் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பது குறித்து அனைவரும் பேசினர். முன்னதாக மங்கள இசையுடன் துவங்கிய வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கடந்த 19 ஆண்டு காலமாக திருவண்ணாமலையில் இருந்து மாநிலத்தின் தலைநகரமான சென்னையை இணைக்கும் நேரடி ரயில் விடுவதற்கு பலரும் பலகட்ட கோரிக்கையை வைத்து வெற்றி பெற முடியாத நிலையில் ஏபிஜிபி அமைப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் இந்த கோரிக்கையை வென்றெடுத்தது என்பது மிகப்பெரிய சாதனையாகும் என்று அனைவரும் ஏபிஜிபி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





Comments
Post a Comment