திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரையடுத்த கானலாபாடி கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா, தீ மிதித்தல் திருவிழா விமரிசையாக நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. மலர் மாலைகளால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு, தீபாராதனை நடந்தது.
விழாவையொட்டி பூங்கரகங்களை கோவிலிலிருந்து பக்தர்கள் தலையில் சுமந்தவாறு வீதி உலாவாக வந்து கோயிலை அடைந்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா சுப்ரமணி தனது சொந்த செலவில் ரூ8.25 லட்சம் மதிப்பிலான டிராக்டர் மற்றும் சகடை ஆகியவற்றை சுவாமி வீதி உலாவிற்கு பயன்படுத்துவதற்காக வழங்கினார்.
புதிய டிராக்டரில் முத்தாலம்மன், ரேணுகாம்பாள்,அம்மச்சார்அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய உற்சவர் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மகன் சீனிவாசன் டிராக்டரை இயக்கியவாறு வீதி உலாவாக ஓட்டிச் சென்று கோயிலை அடைந்தார். இதையடுத்து பக்தர்கள் அவரவர் வீடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்ட கூழை கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த கொப்பரைகளில் ஊற்றினர்.
இதையடுத்து கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் ஸ்ரீ சத்குரு மடம் இளைஞரணி அன்னதான கமிட்டியின் சார்பாக 8ம் ஆண்டு அன்னதானமும் நடந்தது. விழாவில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம்,துணை செயலாளர் சோமாசிபாடி சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி தேவேந்திரன்,மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் நித்யா,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்,இளைஞரணி கிளை செயலாளர் அருளானந்தன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், அரிபாலன்,கிராம நிர்வாக அலுவலர் கண்ணாளன், வார்டு உறுப்பினர் தர்மராஜ்,நாட்டாண்மை ரேணு கவுண்டர் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி அங்குள்ள ரேணுகாம்பாள் கோயில் திடலில் அம்மனைப் பற்றிய நாடகமும்,நாளை முதல் 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.
பட விளக்கம்
-------------------------
1)கீழ்பென்னாத்தூரையடுத்த
கானலாபாடியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் நடந்த கூழ்வார்த்தல்விழா, தீமிதித்தல் திருவிழா முன்னிட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்கள் முத்தாலம்மன், ரேணுகாம்பாள்,அம்மச்சார்அம்மன் மற்றும் கிருஷ்ணர் ஆகிய சாமி சிலைகள் மேளதாளத்துடன் வீதி உலா நடந்தது.
2) பக்தர்கள் பூங்கரங்களை தலையில் சுமந்தவாறு பம்பை உடுக்கையுடன் வீதி உலாவாக வந்து கோயிலை அடைந்தனர்.








Comments
Post a Comment