பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அஸ்வத்தாமன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கோடையின் கொடுமை தணிக்கும் நீர் மோர் பந்தலை உலக சாதனையாளர் மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் பொதுமக்களுக்காக திறந்து வைத்தார், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீர்மோர் பருகி வெயிலில் தாகம் தனித்தனர்
திருவண்ணாமலை கிரிவலப் பாதை காஞ்சி சாலையில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மற்றும் தீபமலை ஆன்மீக தொண்டு இயக்கம் இணைந்து நீர் மோர் பந்தல் உலக சாதனையாளர் தர்ஷன் அவர்களால் திறக்கப்பட்டது. உலக சாதனையாளர் மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் கொடுக்க உலக சாதனையாளர் யமுனா ஹரி கோவிந்தன் நீர் மோரை பெற்றுக் கொண்டார்.
பின்னர் பழங்கள், இளநீர், பழரசம், நீர் மோர், பானகம், குளிர்பானங்கள்
உள்ளிட்டவைகள் உலக சாதனையாளர் ஹனிஷ்குமார் அவர்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கிரிவலம் வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் சுற்றுவட்டார பகுதியினரும் ஆர்வமுடன் வந்து நீர்மோர் குளிர்பானம் தண்ணீர் உள்ளிட்டவற்றை அங்கேயே பருகியும், தங்களின் வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றில் நிரப்பியும் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை சரியான நேரத்தில் தேவையான இடத்தில் திறந்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்கி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் தாகம் தணித்த மருத்துவர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்களுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களின் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



Comments
Post a Comment