கழிவு நீரும், சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி நின்று சேரும், சகதியுமாக துர்நாற்றம் வீசும் சுகாதாரமற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்து விட்டதாக பொய்யான பதில் அளித்துள்ள வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்துள்ள சமூக ஆர்வலர் மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளதால் பரபரப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சாக்கடை நீரும், கழிவு நீரும் குளம் போல் காட்சியளிக்கும் அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது. கழிவு நீரும், சாக்கடை நீரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் சேரும் சகதியுமான சாக்கடை நீர் வழிந்தோடும் பாதையில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.
சாக்கடை நீர், கழிவு நீர், மழை நீர் ஆகியவற்றால் கொசுக்கள் உற்பத்தியாகி சுற்றுப்புறத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்களுக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியினர் அப்பகுதியைச் சுற்றி துர்நாற்றம் வீசுவதாகவும், கொசுத்தொல்லை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல் நோய்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆவூர் கிராமத்தில் வசித்து வரும் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி, பத்து ரூபாய் இயக்கத்தின் சமூக ஆர்வலர் முபாரக் அலி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியதற்கு கழிவு நீர் தேங்கி இருந்த பகுதியை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பொய்யான பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் முபாரக் அலி மற்றும் அப்பகுதியினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பொய்யான பதில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி சேரும், சகதியுமாக கழிவு நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கும் அவல நிலை காணப்படுகிறது, அந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதால் நோயாளிகளும், பொதுமக்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சேற்றில் சென்று வர மிகவும் சிரமப் படுவதாகவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். எனவே எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொய்யான பதில் தகவல் அளித்த சுகாதார அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சாக்கடை நீர் கழிவு, நீர் மற்றும் மழை நீர் ஆவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுத்து கொசு உற்பத்தியை தடுத்து, துர்நாற்றத்தில் இருந்து அப்பகுதியை விடுவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவு நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கும் இடத்தை சரி செய்து விட்டதாக பொய்யான பதில் அளித்துள்ள வட்டார மருத்துவ அலுவலரை கண்டித்துள்ள சமூக ஆர்வலர் மீண்டும் சுகாதார நிலையப் பகுதியை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







Comments
Post a Comment