ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய 19ம் ஆண்டு வீர வன்னிய நாடகம், நாடகாசிரியர் மாயாசி தலைமையில் 7 நாட்கள் நடைபெறுகிறது
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ராந்தம் மதுரா அண்ணா நகர் ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலய 19ம் ஆண்டு வீர வன்னிய நாடகம் நாடகாசிரியர் மாயாசி தலைமையில் 7 நாட்கள் நடைபெறுகிறது.
வன்னியன் பிறப்பு நாடகத்தில் கருங்காலி, நாயுருவி, நெய், வன்னிக்குச்சி தர்ப்பை, அருகம்புல் உள்ளிட்டவை கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஆளுயர யாகத் தீயில் வன்னியன் இறங்கிய பின்னர் திருக்கல்யாண நிகழ்வும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. நாடகத்தை பார்வையிட்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ராந்தம் மதுரா அண்ணா நகர் கிராமத்தில் திருக்கோயில் கொண்டுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு வீர வன்னிய நாடகம் நடைபெற்று வருகிறது.
அதில் முக்கிய நிகழ்வான வன்னியன் பிறப்பு நாடகம் இரவு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை வணங்கினர்.
அப்போது பக்தர்கள் மீது சுவாமி வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். வன்னியன் திருக் கல்யாண நிகழ்வும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
நாடகாசிரியர் மாயாசி தலைமையிலான நாடகக் குழுவினர் தொடர்ந்து ஏழு நாட்களாக வீர வன்னிய நாடகத்தை நடத்த உள்ளனர். ஊர் பொதுமக்கள் மற்றும் வன்னிய நாடக குழுவினர் சார்பாக நாடக ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டது.

வீர வன்னியன் செய்த யாகத்தில் கருங்காலி, நாயுருவி, நெய், வன்னிக்குச்சி, தர்ப்பை, அருகம்புல் உள்ளிட்டவை கொண்டு ஏற்படுத்தப்பட்ட யாகத்தில் தீமூட்டி அனைவரும் வணங்கினர். அப்போது வன்னியன் ஆளுயர பற்றி எரிந்த அந்த யாகத் தீயில் இறங்கினார்.
அப்போது பக்தர்கள் மீது சுவாமி வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். வன்னியன் திருக் கல்யாண நிகழ்வும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.
நாடகாசிரியர் மாயாசி தலைமையிலான நாடகக் குழுவினர் தொடர்ந்து ஏழு நாட்களாக வீர வன்னிய நாடகத்தை நடத்த உள்ளனர். ஊர் பொதுமக்கள் மற்றும் வன்னிய நாடக குழுவினர் சார்பாக நாடக ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் செய்யப்பட்டது.
நாடகத்தை கலந்து கொண்டு பார்வையிட்ட அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Comments
Post a Comment