Skip to main content

Posts

Showing posts from January, 2022

மதம் மாற வலியுறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாஜக மருத்துவ அணி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

 மத்திய அரசு நலத்திட்டங்களை பெற அடையாள அட்டைகளை இலவசமாக பதிவு செய்து பெற்றுத்தந்த பாஜக மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன். திருவண்ணாமலை வடஆண்டாபட்டு தீபமலை மருத்துவமனையில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகளை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட மத்திய அரசு திட்டங்களுக்கான அடையாள அட்டைகளை அளிப்பதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் யமுனா ஹரிகோவிந்தன் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும், பொதுமக்களையும், பயனாளிகளையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாஜக மாவட்டத் தலைவர் R.ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு, பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஹெல்த் கார்டு, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜனா மற்றும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை ஆகியவற்றை 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்க...

மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறுபவர்கள் உற்சாகமாக 73 வந்து குடியரசு தினத்தை கொண்டாடினர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள உதவும் கரங்கள் மறுவாழ்வு மையத்தில் 73-வது சுதந்திர தின விழா கொடியேற்றி கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பதையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் சுமைதாங்கி பெண்கள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 -க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தங்களது வாழ்க்கையை பற்றி புரிந்தும்,புரியாமலும் வாழும் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உதவும் கரங்கள் நிறுவனர் பப்பா வித்யாகர் ஆலோசனையின் பேரில் அங்கு நேற்று 73 -வது குடியரசு தின விழா நடைபெற்றது.  இதனை முன்னிட்டு ரமணா மறுவாழ்வு மையம் முன்பு மகாத்மா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  அவர் பேசும்போது, "மனநோயாளிகள் அனைவரும் நலம் பெற வேண்டும் .இந்த நிகழ...

73வது குடியரசுதினவிழா, முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் தேசியக் கொடியை ஏற்றி பாரத் மாதா கீ ஜே என்று முழக்கம்.

 திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பாக 73வது குடியரசு தினவிழா கோலாகலம்.  திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் 73வது குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  பொறுப்பு அதிகாரி கர்னல் ருசிகேசவன், ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாநிதி,  முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க மாவட்டத் தலைவர் கருணாநிதி மற்றும் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் பாடப்பட்டு, தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தி பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டனர். வந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையும் செலுத்தப்பட்டது.

பாஜக கொடியேற்றி, நம்ம ஊரு பொங்கல் விழா, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் கோலாகலம்

 திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில்  கட்சி கொடி ஏற்றி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.  துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் மணிகண்டன் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி நம்ம ஊரு பொங்கல்விழா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.ஒன்றிய தலைவர் பழனி வரவேற்று பேசினார். மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் நம்ம ஊரு பொங்கல் விழா குறித்து விளக்க உரை நிகழ்த்தி பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலை வழங்கினார், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜதமயந்தி நம்ம ஊரு பொங்கல் விழ...

மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகள் பெற இலவசமாக பதிவுசெய்து கொடுக்கும் பாஜக மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன்.

திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு தீபமலை மருத்துவமனை வளாகத்தில் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பைபாஸ் சாலையில் உள்ள தீபமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக மத்திய அரசின் ஏராளமான நலத்திட்டங்கள் பெறுவதற்கான அடையாள அட்டைகள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்கள் தலைமையில் பதிவு செய்து கொடுக்கப்பட்டது. குறிப்பாக மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு, பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஹெல்த் கார்டு, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜனா மற்றும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை உள்ளிட்டவை மத்திய அரசின் பொது சேவை மையம் ஈச்சாங்குப்பம் சென்டரின் மூலம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் தலைமையில், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்ற...