திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக, துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியத்தில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியில் கட்சி கொடி ஏற்றி கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், ஈச்சங்குப்பம் கிராமத்தில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக நம்ம ஊரு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியின் கொடி ஏற்றம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பாஜக பொதுச் செயலாளர் மணிகண்டன் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு பாஜக கொடியை ஏற்றி நம்ம ஊரு பொங்கல்விழா நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.ஒன்றிய தலைவர் பழனி வரவேற்று பேசினார்.
மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் நம்ம ஊரு பொங்கல் விழா குறித்து விளக்க உரை நிகழ்த்தி பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலை வழங்கினார், மாவட்ட மகளிரணி தலைவர் ராஜதமயந்தி நம்ம ஊரு பொங்கல் விழாவில் நடைபெற்ற கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு சேலை வழங்கி வாழ்த்தினர்.
கோட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் பிச்சாண்டி, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன், அறிவுசார் பிரிவு தலைவர் அருணகிரிநாதன், இளைஞர் அணி பொதுச் செயலாளர் சந்தோஷ், மகளிர் அணி துணைத் தலைவர் மெட்டில்ராணி, ஈச்சங்குப்பம் கிளை தலைவர் தங்கவேல், கோவிந்தசாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு நம்ம ஊர் பொங்கல் விழா நிகழ்ச்சியை கோலாகலமான முறையில் வெகு விமரிசையாக நடத்தினர்.
Comments
Post a Comment