மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகள் பெற இலவசமாக பதிவுசெய்து கொடுக்கும் பாஜக மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன்.
திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு தீபமலை மருத்துவமனை வளாகத்தில் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கான அடையாள அட்டைகள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரிகோவிந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக பதிவு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு பைபாஸ் சாலையில் உள்ள தீபமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு இலவசமாக மத்திய அரசின் ஏராளமான நலத்திட்டங்கள் பெறுவதற்கான அடையாள அட்டைகள் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக மருத்துவ அணித் தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் அவர்கள் தலைமையில் பதிவு செய்து கொடுக்கப்பட்டது.
குறிப்பாக மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு, பாரதப் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் ஹெல்த் கார்டு, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் அரோக்ய யோஜனா மற்றும் ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை உள்ளிட்டவை மத்திய அரசின் பொது சேவை மையம் ஈச்சாங்குப்பம் சென்டரின் மூலம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மருத்துவ அணி மாவட்ட தலைவர் டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன் தலைமையில், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் எம்.மணிகண்டன் எம்கேபி சென்டர் மூலம் பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இலவசமாக பதிவு செய்யப்பட்டது.
சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு இலவசமாக பதிவு செய்து பயன் பெற்றனர்.மேலும் தொடர்ந்து இந்த இலவச பதிவானது தீபமலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நகர மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் தங்கவேல், கிளை தலைவர் முனியம்மாள், நிஷா, மாரிமுத்து மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment